தரம்

ஆசைகள் அதிகமாவே உண்டு. அதை அடுத்த நாளிலே நிறைவேற்றிக்கொள்ளும் பணமும் பதவியும் சக்தியும் உண்டு. மாளிகை வீடு, காஸ்ட்லி ஷர்ட், காஸ்ட்லி பாண்ட் , வாட்ச், ஸ்மார்ட் போன் … வாங்குவதெல்லாம் தரமான பொருள். ரேஷன் கடைனா என்ன? இன்னைக்கு வேர்த்துச்சுனா நாளைக்கு வீட்டுல ஏர் கண்டிஷனர். இன்னைக்கு கால் வலிச்சதுனா நாளைக்கு காரோ பைக்கோ கையில. மூணு வேலையும் அளவில்லாத ருசியான சாப்பாடு. இத்தனை செலவுகள் போக மீதம் கை நிறைய காசு. ஞாபகம் வச்சுக்கற அளவுல சொத்து இல்ல. அதிகமா இருக்கு. குறைந்தபட்ச பஸ் கட்டணம் ஆயிரம் ஓவா. உலகம் சுற்ற தடை இல்ல. ஏரோபிலேன் சீட்டில் அடிக்கடி உக்காந்ததுண்டு. திருவிழா கல்யாணம். அவுங்க லெவல் வேற. மேல்தட்டு மக்கள்.

நிறைவேற்றிக்கொள்ளும் அளவுக்கு சின்ன சின்ன ஆசதான். மாளிகை வீடு வாங்க கனவு இல்ல. ஏசி காரோ, பைக்கோ வாங்க ஆசயும் இல்ல பணமும் இல்ல. ருசிக்கு சாப்பாடு இல்ல ஆனா பசிக்கு சாப்பாடு இருக்கு. சிலநேரம் தவிர. படிப்பறிவு கம்மிதான். அதுவே போதும் வாழ்க்கைக்கு. படிக்கவைக்க தெரியாது. படிச்சாதான் பணம் என்றும் தெரியாது. எந்தமாதிரியான சுகத்தையும் அனுபவித்தது கிடையாது. பின்ன எப்படி ஆசைகள் வரும். போதும் என்ற மனம். கம்ப்யூட்டர், டெக்னாலஜி, பேஷன், ப்ரொபெஸ்ஸன் இதெல்லாம் என்னது ?? தலைய சொறிவாங்க. கிலோமீட்டர் பயணமா இருந்தாலும் நடந்தே போகும் தெம்பு உடம்புல இருக்கு. ஏரோப்லேன் ஏதோ வேற்று கிரக வாசி வாகனம். சோம்பேறி இல்ல. ஒரு நாள் செலவு சராசரியாக ஐம்பது ரூபாய்க்கும் குறைவு. வீட்டுல இலவச மிக்ஸி டிவீ… சிலருக்கு அடையாளமே இல்ல. இவுங்க லெவல் இது. கீழ்தட்டு மக்கள்.

உலகின் பாவப்பட்ட ஜென்மம். பேஸ்புக்கின் அல்காரிதம் முதல் ரேஷன் கடை அரிசி வரை எல்லாம் தெரியும். திறமைகள் உண்டு வாய்ப்புகள் இல்ல. மூணு வேல சாப்பிட எந்த பிரச்னையும் இல்ல. கிடைக்கும்போது கே.எப்.சி சிக்கன் , மெக் டொனால்ட் பிஸ்சா பணமில்லாதபோ ரோட்டுகட இட்லி் வரை உண்டதுண்டு. நிரந்தரமாக எதையும் அனுபவித்ததில்லை. பணக்கரனுக்கும் மரியாதை கொடுப்பான் ஏழைக்கும் இரக்கம் காட்டுவான். எல்லா சமூக பிரச்சனைக்கும் முன்னாடி நிப்பான். மணமிருந்தும் மார்க்கம் இல்ல. ஆச நெறய. அத நிறைவேதுறதுக்கு வாய்ப்பில்லை. ரெண்டும் கெட்டான். பணக்கரனை போலவும் வாழமுடியும் ஏழையை போலவும் வாழமுடியும். எண்ணங்கள், அறிவு, செயல்கள் மேல்தட்டு மக்களைப்போல் பணபலம், உடல் பலம் கீழ்தட்டு மக்களைப்போல். கனவுகோட்டை இடிந்து போகும். நடுத்தரம்….தரம் …

Advertisements

4 thoughts on “தரம்

  1. Very well written. All your posts are thought provoking. You can translate it in English so that it will reach many people or find more Tamil readers. And also try applying for Tamil newspapers and magazines. My best wishes.

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s