கவ்ஸார் ஹுசைன், ஒற்றை கை அரசன்.

ண் விழித்து எழுந்தவுடன் உங்கள் அலமாரியை பார்த்து போதிய உடுப்புகள் இல்லை என்று எண்ணியதுண்டா, அதை உடனே வாங்க வேண்டும் என்றும் நாம் நினைத்ததுண்டு. இத்தகைய செயல்கள் நமக்கு வெகு சாதாரணம். நாம் நினைத்ததை அன்றைக்கே வாங்கும் அளவிற்கு நாம் குடுத்து வைத்தவர்கள். யோசிக்க கூட நேரம் குடுக்காமல் உடனே சென்று வாங்கிவிடுவோம். இது அவ்வளவு சாதாரண விஷயம்.

சிலருக்கு ஆடம்பரம் சிலருக்கு அத்தியாவசியம்

ந்த உடுப்புகள் கூட இல்லாமல் ஆயிரகணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாம் சாதாரணமாக பார்க்கும் சில செயல்கள் அவர்களுக்கு கனவாகவே இருக்கிறது. அந்த கனவை நிறைவேற்ற அவர்கள் பெரும்பாடு பட வேண்டியதாய் உள்ளது. இருந்தும் சிலர் அதில் உறுதியாக இருந்து கனவை நிறைவேற்றிகொள்கிறார்கள்.

கவ்ஸார் ஹுசைன், பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துபவர், எதிர்பாராத ஒரு விபத்து அவரது வலது கையை வாங்கிகொண்டு அவரை ஊனமாக்கியது. தன் குடும்பத்திற்கு ஆதரவாக எந்த வழியும் திறக்காத நிலையில் பிச்சை தொழிலை செய்ய ஆரம்பித்தார். தன்னிடம் இருந்த சில்லறைகளை எடுத்துகொண்டு தன் மகளுக்கு உடுப்பு வாங்க சென்றபோது கடைக்காரன் அவரை வெளியேற்றினான். அன்று அவர்கள் கண்ணீரை மட்டுமே வாங்கிகொண்டு வீடு திரும்பினார்கள். ஆனால் இச்சம்பவம் அவரது உறுதியையும் மனநிலையையும் மாற்றவில்லை.

ரண்டு வருடங்கள் சென்றபின் அதே நாளில் தன்னுடைய மகளுக்கு ஒரு அழகான மஞ்சள் கனவு உடுப்பை வாங்கிவிட்டார். மனமுடைக்கும் இந்த புகைப்படம் வங்காளதேசத்தை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆகாஷ் என்பவரால் எடுக்க பட்டது. ஆகாஷ் தனது வருமானத்தில் பாதியை ஏழை குழந்தைகள் கல்விக்கு செலவிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இத்தகைய புகைப்படத்தை உங்களால் கண்ணீரின்றி கடக்க இயலாது.

ரண்டு வருடங்களுக்கு பிறகு ஒரு புதிய உடுப்பு வாங்க நேர்ந்தது. ஐந்து டகாகளை (4 Rs) கொண்ட அறுபது நோட்டுகளை (240 Rs) கடைகாரரிடம்  தந்தபோது  என்மேல் கோபம்கொண்டு என்னை பிச்சைகாரனா என்று ஏளனமாக  கேட்டான். என் மகள் என் கையை பிடித்துகொண்டு “எனக்கு எதுவும் வேண்டாம் இங்கிருந்து போய்விடுவோம் என்று கரைந்தாள்” . என்னுடைய ஒரு கையை வைத்து அவளது கண்ணீரை துடைத்தேன். ஆம், நான் பிச்சைகாரன் தான், பத்து வருடங்களுக்கு முன்பு நான் கனவிலும் நினைத்ததில்லை நான் மற்றவர்களிடம் பிச்சை எடுத்துதான் வாழபோகிறேன் என்று. மேம்பாலத்தில் இருந்து ஒரு வண்டி என்மேல் விழுந்தது நம்பமுடியாத வகையில் நான் பிழைத்தேன். ஊனமாக உயிர் பிழைத்தேன். என் இளைய மகன் எங்கே நான் என் கையை விட்டு வந்தேன் என்று அடிக்கடி கேட்பான்.  ஒரு கையை வைத்துகொண்டு எல்லா வேலையையும் செய்வது எவ்வளவு கடினமானது என்று சொல்லி என் மகள் சுமைய்யா எனக்கு தினமும் உணவு ஊட்டுவாள்.

இரு வருடங்களுக்கு பிறகு என் மகள் இன்று புது உடுப்பு உடுத்தி இருக்கிறாள் அதனால் அவளுடன் கொஞ்சம் விளையாடுவதற்கு இங்கே கூட்டி வந்திருக்கிறேன். இன்றைக்கு என்னால் எதையும் சம்பாதிக்க முடியாது ஆனால் என் சிறு பெண்ணுடன் நான் சுற்றி திரிய ஆசை படுகிறேன். இந்த அலைபேசியை என் மனைவிக்கு தெரியாமல் என் பக்கத்துக்கு வீட்டுகாரரிடம் இருந்து வாங்கி வந்துள்ளேன். என் மகளிடம் புகைபடம் கிடையாது அதனால் இந்த நாளை அவளால் மறக்கமுடியாத நாளாக மாற்ற விரும்புகிறேன். ஒரு நாள் என்னிடம் போன் இருக்கும் அப்போது என் குழந்தைகளை வைத்து நிறைய புகைப்படம் எடுப்பேன். நல்ல நினைவுகளை நான் சேமிக்க ஆசைபடுகிறேன். என் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது கடினமான ஒன்று, இருந்தும் அவர்களை படிக்க வைக்கிறேன். சிலசமயங்களில் அவர்களால் பரீட்சை எழுதமுடியாமல் போய்விடும் ஏனென்றால் பரீட்சை கட்டணம் கட்டுவது எப்போதும் இயலாத காரியம்.

அப்பொழுது நான் சொல்வது சிலநேரங்களில் நாம் பரிட்சையை தவற விடலாம் ஆனால் மிகப்பெரிய பரீட்சை ஒன்று உள்ளது அதுதான் வாழ்க்கை அதை என்றும் தவறவிட கூடாது.

17880547_1395679070496843_1194236849179974342_o

ப்பொழுது நான் பிச்சை எடுக்க செல்கிறேன். என்னுடைய மகளை சிக்னலில் விட்டுவிடுவேன் அங்கே அவள் எனக்காக காத்திருப்பாள். பிச்சை எடுக்கும்போது தூரத்தில் இருந்து அவளை பார்த்து கொள்வேன். மற்றவர்களிடம் ஒரு கையை ஏந்தி பிச்சை எடுப்பதை அவள் பார்க்கும்போது எனக்கு அவமானமாக இருக்கும். ஆனால் அவள் எப்பொழுதும் என்னை விட்டு செல்வதில்லை. ஏனென்றால் மறுபடியும் விபத்து ஏற்படும் இந்த பெரிய வாகனங்கள் என்மேல் ஏறிவிடும் நான் இறந்துவிடுவேன் என்ற பயம் அவளுக்கு.  கொஞ்சம் பணம் கிடைத்தவுடம் அவளின் கையை பிடித்துகொண்டு வீடு திரும்புவோம். போகும் வழியிலேயே வாங்கவேண்டிய சில பொருட்களை வாங்கி செல்வோம். அந்த பையையும் அவள்தான் தூக்கி செல்வாள். மழை பெய்யும் பொழுது நனைந்து கொண்டு எங்களுடைய கனவுகளை பற்றி பேசி கொள்வோம். சில நேரங்களில் பணம் கிடைபதில்லை அந்நாட்களில் அமைதியாக வீடு சென்றுவிடுவோம். அப்பொழுதெல்லாம் சாக வேண்டும் என்ற எண்ணம் வரும். என் பிள்ளைகள் என் கையை பிடித்து தூங்கும்போது வாழ்வது கடினமல்ல என்று நினைப்பேன். நான் பிச்சை எடுக்கும்போது அவள் எனக்காக தலை குனிந்து காத்திருப்பதை பார்ப்பதே எனக்கு கடினம். அப்பொழுது அவளின் முகத்தை என்னால் பார்க்க முடியாது. ஆனால் இன்றைய நாள் வித்தியாசமான நாள். இன்று என் மகள் மிக சந்தோசமாக இருக்கிறாள். இன்று நான் பிட்சைகாரனில்லை. இன்று நான் ஒரு ராஜா என்னுடைய ராஜகுமாரி இதோ…..

—– கவ்ஸார் ஹுசைன்

நன்றி ஆகாஷ்

Advertisements

One thought on “கவ்ஸார் ஹுசைன், ஒற்றை கை அரசன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s