கூகுள் Play Store ல் பரவி வரும் போலி விமர்சனங்கள்

ப்ளே ஸ்டோர் ல் வரும் போலி விமர்சனங்கள் ஒன்றும் புதிது அல்ல இருந்தாலும் அது மிக வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது .

ஆன்லைன்பாட்ஸ் எனப்படும் ஆன்லைன் ப்ரோக்ராம் கள் போலி விமர்சனங்களை பதிவிடுவது புதிய நிகழ்வு அல்ல எனினும் இது போன்ற நடைமுறை பரவலாக அதிகமாகி வருகிறது அதன்படி கூகிள் இதற்கு பதில் அளிக்க வேண்டும்.

இந்தபிரச்சனை முதலில் whatsapp ஆப்பில் வெளிப்பட்டது. Whatsappன் ஸ்டார் ரேடிங் திடிரென ஐந்தாக உயர்ந்தது. அது முற்றிலும் போலியான மதிப்பீடு. வெற்று பயனர்பெயரில் உள்ள சில ஆன்லைன் பாட்ஸ்கள் “ சிறந்த விளையாட்டு “ என்று விமர்சிக்கும்போதே தெரிந்தது.

எனினும்இந்த பிரச்சனை whatsappபிற்கு மட்டும் சொந்தம் இல்லை. இத்தகைய ஆன்லைன் பாட்ஸ்கள் playstoreல் உள்ள மற்ற பிரபலமான கூகுள் க்ரோம், ஜிமெயில், facebook messenger போன்ற ஆப்ஸ்களிடமும் நம்பக தன்மையை உருவாக்க  போலி விமர்சனங்களை பதிவிட்டு வருகிறது.

போலிவிமர்சனங்களை கண்டுகொள்வது மிக கடினமான ஒன்று அல்ல. உதாரணமாக அந்த போலி பதிவிடும் பயனர்பெயர் வெற்றாக இருக்கும் அது எந்த ஒரு குறிப்பிட்ட நபரையும் குறிக்காது. மற்றும் அந்த போலி விமர்சனம் அந்த ஆப்ஸ்சிற்கு சம்பந்தம் இல்லாத ஒரு விமர்சனமாக இருக்கும். உதாரணமாக whatsapp ல் “ குட் வீடியோ கேம்” என்று விமர்சிப்பது.

க்ரோம் ஜிமெயில் போன்ற ஆப்ஸ்களிலும் இது போன்ற போலி விமர்சனங்களை கண்டுபிடிப்பது கடினமல்ல.

பிரச்சனைஎன்னவென்றால் இத்தகைய போலி விமர்சனங்கள் அறிவுப்பூர்வமாக வளர்ந்து வருகிறது. இந்த ஆன்லைன் பாட்ஸ் களின் பாதையை கண்காணிப்பது கடினமாகவே உள்ளது. அவற்றின் பெரிய இலக்கு கண்டிப்பாக ஏற்கனவே உள்ள google chrome, facebook messenger போன்ற ஆப் களின் மதிப்பீட்டை உயர்த்துவது இல்லை. அதன் உண்மையான வேலை மொபைல் போன் களுக்கு தீங்கு தரும் சில கட்டண ஆப்ஸ் களில் அதே பயனர் கணக்கினை வைத்து விமர்சனத்தை பதிவிடும்போது தொடங்குகிறது. இது google play store கு மட்டுமே வந்திருக்கும் ஒரு தனிப்பட்ட பிரச்சனை. இதற்கு அதிகார பூர்வமாக கூகுளிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. இது ஆண்ட்ராய்டு கு தொடர்ச்சியாக வரும் பிரச்சனை. இதனை கூகுள் வெகு விரைவாக தீர்வு காண வேண்டும்.

எனவேplay storeல் இருந்து கட்டண ஆப்ஸ்களை டவுன்லோட் செய்யும்போது கவனமாக பார்த்து கொள்ளவும்.

நீங்கள்ஏதேனும் போலி விமர்சனத்தை பார்த்ததுண்டா?? அப்படி என்றால் அது என்னவென்று உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடவும்.
நன்றி.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s